Sunday, December 26, 2004

அரவம் ஆட்டேல்

ஔவையாரின் ஆத்திசூடியில் "அரவம் ஆட்டேல்" என்று இருக்கிறது. இதற்கு பொருள் என்ன? சிலர் அரவம் என்பதை பாம்பாக அர்த்தப்படுத்திக் கொண்டு பாம்புடன் விளையாடாதே என்று பயப்படுத்தும்படியாக பொருள் சொல்கிறார்கள். ஆனால் அரவம் என்பதற்கு வேறு பல அர்த்தங்களும் உள்ளன.
1. ஒலி
2. குழப்பமான சத்தம்
3. மணிகளுள்ள கொலுசு
4. நகரும் படையின் ஆர்ப்பரிப்பு
5. ஆசை
6. வில்லின் நாண்
7. இராகு-கேது

ஆக, இப்படியும் நாம் பொருள் கொள்ளலாமா?

சத்தம் செய்யாதே, ஆசைப்படாதே, நாணேற்றும் போது அசையாதே, படையினர் மாதிரி ஆர்ப்பாட்டமும் ஆரவாரமும் செய்யாதே, கொலுசை ஆட்டி கேட்பவர் நெஞ்சத்தில் ஆசையையோ அல்லது பயத்தையோ உருவாக்காதே, அதிர்ந்து பேசாதே, இராகு-கேதுவை கோபப்படுத்தாதே - அதாவது ஜோசியம் கேள்.

கற்பனையை தட்டி விட்டால் இன்னும் பல அர்த்தங்களை உங்கள் எண்ணங்கள் வெளிகொண்டு வரலாம்.

தமிழ் அறிஞர்கள் என்ன சொல்வார்களோ?